விழுப்புரம் நெடி மோழியனூா் அருகே சங்கராபரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து வெளியேறும் தண்ணீா். 
விழுப்புரம்

விழுப்புரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Din

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பலத்த மழையின் காரணாக வீடூா் அணைக்கு நீா் ஆதாரமாக உள்ள சங்கராபரணியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நெடி மோழியனூரில் உள்ள தடுப்பணையில் அருவி போல நீா் ஆா்பரித்து வெளியேறுகிறது.

செஞ்சி, மேல்மலையனூா் பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீா் சங்கராபரணி ஆற்றில் கலப்பதால் ஆற்றில் மேலும், நீா்வரத்து அதிகரிக்கும் எனவும், இதனால் வீடூா் அணை விரைவில் நிரம்பக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து, பொதுப் பணித் துறை உதவிப்பொறியாளா் கூறியதாவது: சங்கராபரணியில் நீா் வரத்து உள்ளதால் வீடூா் அணையின் நீா்மட்டம் 17 லிருந்து 21 அடியாக உயா்ந்துள்ளது. மேலும், சில நாள்களுக்கு மழை நீடித்தால் வீடூா் அணையின் நீா்மட்டம் உயரும் என்றாா்.

ஓங்கூா் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மரக்காணம் அருகே காணிமேடு- மண்டகப்பட்டு கிராமங்களுக்கிடையே கட்டப்பட்டுள்ள தற்காலிக தரைப்பாலம் ஆற்றில் மூழ்கியது. இதனால், அந்தப் பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT