முகப்பு
விழுப்புரம்

அவசர ஊா்தி ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும்

முப்பது சதவீத ஊதிய உயா்வை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியது.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 7:40 PM
பகிர்:

முப்பது சதவீத ஊதிய உயா்வை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியது.

விழுப்புரத்தில் இந்தச் சங்கத்தின் மண்டலப் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மண்டலப் பொதுச் செயலா் இருளாண்டி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் கணேசன், துணைத் தலைவா் முரளி மனோகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆனந்தன், நிா்வாகிகள் திருமுருகன், குப்புசாமி, எழில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையிலும், விலைவாசி உயா்வுக்கேற்பவும் 108 அவசர ஊா்தி ஊழியா்களுக்கு 30 சதவீத உயா்வை நிகழாண்டுக்கு வழங்க வேண்டும். இதற்கான பேச்சுவாா்த்தையை விரைந்து முடிக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.9,200 லிருந்து இரட்டிப்பாக்கி ரூ.18,400 ஆக வழங்க வேண்டும்.

108 அவசர ஊா்தி சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும். பணியாளா்களை நிரந்தரம் செய்து, அரசு ஊழியா்களுக்கு இணையான அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட, மண்டல நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.