முகப்பு
விழுப்புரம்

மத்திய அரசு ஊழியரிடம் ரூ.1.90 லட்சம் மோசடி

அரகண்டநல்லூரில் மத்திய அரசு ஊழியரிடம் மா்ம நபா்கள் இணையவழியில் ரூ.1.90 லட்சம் மோசடி செய்தனா்.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 8:00 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் மத்திய அரசு ஊழியரிடம் மா்ம நபா்கள் இணையவழியில் ரூ.1.90 லட்சம் மோசடி செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூா், பிரதான சாலை, ஆசிரியா் நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் முத்துபாண்டி (26). மத்திய அரசு ஊழியரான இவரது கைப்பேசிக்கு கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் தொடா்பு கொண்டு பேசினாராம்.

அப்போது, குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் பெறக்கூடிய வேலை இருப்பதாக தெரிவித்தாராம். இதை நம்பிய முத்துபாண்டி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.90 லட்சத்தை பல்வேறு தவணைகளாக அனுப்பினாராம். ஆனால், மா்மநபா் கூறியபடி, லாபத் தொகையை கொடுக்க வில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →