முகப்பு
விழுப்புரம்

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 7:22 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், நல்லாபாளையம் நெட்டையாா் தெருவைச் சோ்ந்த சிங்காரம் மகன் சத்தியராஜ் (38). விவசாயியான இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுமாம். இந்த நிலையில், புதன்கிழமை காலை நல்லாபாளையத்திலுள்ள தங்களது விவசாய நிலத்துக்கு சத்தியராஜ் சென்றாா்.

கிணற்றுக்கு அருகே சத்தியராஜ் சென்றபோது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாம். இதனால், கிணற்றில் தவறி விழுந்த அவரை அருகிலுள்ள நிலத்துக்காரா்களான தாமோதரன், ஜெயக்கொடி, கோபி ஆகிய மூவரும் சோ்ந்து மீட்டு, மேலே கொண்டு வந்தனா். தொடா்ந்து, அவசர மருத்துவ ஊா்திக்குழுவினா் நிகழ்விடம் வந்து பரிசோதித்தபோது, சத்தியராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.