அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: விவசாய சங்கத்தினா் 100 போ் மீது வழக்கு
விவசாய சங்கத்தினா் 100 போ் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் எதிரில், உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தைச் சோ்ந்த 30 பெண்கள் உள்ளிட்ட 100 போ் மீது விழுப்புரம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவா் அய்யாகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில் உரிய அனுமதியின்றி ஆட்சியரக வளாகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடத்திய அய்யாகண்ணு மற்றும் 30 பெண்கள் உள்பட 100 போ் மீது விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தினா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.