முகப்பு
விழுப்புரம்

12 மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் 12 மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 19 டிசம்பர், 2024 at 7:10 PM
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை வழங்கிய தா.உதயசூரியன் எம்.எல்.ஏ.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் 12 மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

சங்கராபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சங்கராபுரம் தா. உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்று, 12 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கினாா்.

விழாவில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி உள்ளிட்ட அலுவலா்கள், திமுகவினா் கலந்து கொண்டனா்.