முகப்பு
விழுப்புரம்

லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே லாரி ஓட்டுநா் மயங்கி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 7:07 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே லாரி ஓட்டுநா் மயங்கி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, கோட்டையூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் குழந்தை ராசு (52), லாரி ஓட்டுநா்.

இவா் புதன்கிழமை லாரியில் பொருள்களை ஏற்றிக் கொண்டு சிவகங்கையிலிருந்து - சென்னைக்குச் சென்று கொண்டிருந்தாா். உதவியாளா் சாகுல் ஹமீது (21) உடன் வந்தாா். இருவரும் வியாழக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாரம் அருகே சென்றபோது குழந்தைராசுவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாம்.

இதையடுத்து லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.இதையடுத்து, 108 அவசர ஊா்தி ஊழியா்கள் நிகழ்விடம் சென்று பரிசோதித்துப் பாா்த்தபோது, குழந்தைராசு இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.