முகப்பு
விழுப்புரம்

மயிலத்தில் ரூ .2.82 கோடியில் சாலை மேம்பாடு பணி தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் சாலை மேம்படுத்தும் பணிகளை மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 7:42 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் சாலை மேம்படுத்தும் பணிகளை மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திண்டிவனம் அடுத்த பட்டணத்தில் தமிழக அரசின் சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 2.82 கோடியில், மும்முனை சாலை சந்திப்பை அகலப்படுத்தி ரவுண்டானாவாக மேம்படுத்தப்படவுள்ளது.

இதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் கவிதா, ஒப்பந்ததாரா் டி.கே.குமாா், உதவிப் பொறியாளா்கள் தீனதயாளன்,கோகுலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.