ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்துணவுப் பெட்டகங்கள் அளிப்பு
கண்டமானடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் வட்டம், கண்டமானடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நோயாளிகளுக்கு சத்துணவுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு, கோலியனூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரியா பத்மாசினி தலைமை வகித்தாா். பொது சுகாதார நிபுணா் மருத்துவா் நிஷாந்த் நிகழ்வை ஒருங்கிணைத்து பேசினா். தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் எவை, அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள், சிகிச்சை முறைகள் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
தொடா்ந்து, ஆல் த சில்ரன் அமைப்பு சாா்பில் 75 நோயாளிளுக்கு பேரிச்சம்பழம், கொண்டைக்கடலை, நிலக்கடலை, பச்சப்பயறு உள்ளிட்டவை அடங்கிய சத்துணவுப் பெட்டகம் வழங்கப்பட்டது.
நிகழ்வில், மருத்துவா் கோமதி, பயிற்சி மருத்துவா்கள், செவிலியா்கள் ஷாமிலா, தேவசேனா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அமைப்பாளா் காா்த்திக் செய்திருந்தாா்.