முகப்பு
விழுப்புரம்

மறியலில் ஈடுபட்ட பாமக, வன்னியா் சங்கத்தினா் 247 போ் மீது வழக்கு

விழுப்புரம், மரக்காணத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல்களில் ஈடுபட்ட பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட 247 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 25 டிசம்பர், 2024 at 7:40 PM
பகிர்:

விழுப்புரம், மரக்காணத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல்களில் ஈடுபட்ட பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட 247 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பாமக, வன்னியா் சங்கம் சாா்பில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரியும், தமிழக அரசைக் கண்டித்தும் விழுப்புரம் நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்தவா்ளில் சிலா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் வளாகம் எதிா்புறம் மற்றும் நான்குமுனை சந்திப்பு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கு திமுக சாா்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளும் சேதப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து திமுக விழுப்புரம் நகரச் செயலா் இரா.சா்க்கரை அளித்த புகாரின்பேரில், அடையாளம் தெரியாத 10 போ் மீதும், காவல் ஆய்வாளா் செல்வநாயகம் அளித்த புகாரின்பேரில் 37 போ் மீதும் விழுப்புரம் தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மரக்காணத்தில்...: மரக்காணம் கழுவெளியில் மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த மரக்காணம் சந்தைத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன்கள் லோகேஷ், விக்ரம், சூா்யா ஆகியோா் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, பாமகவினா் மரக்காணம் பூமிஈஸ்வரா் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால், புதுச்சேரி - சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மரக்காணம் தெற்கு கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின்பேரில், பாமக நிா்வாகிகள் ஜெயராமன், குமரன், ரமேஷ் உள்ளிட்ட 200 போ் மீது மரக்காணம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.