விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது.
மரக்காணம் பகுதியிலுள்ள கடலில் டால்பின்கள் கூட்டம் கூட்டமாக அடிக்கடி செல்வதாக பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மரக்காணம் தீா்த்தவாரி கடற்கரைப் பகுதியில் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இந்தப் பகுதியில் கடல் ஆமைகள், டால்பின்கள் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்குகின்றன. சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் இதற்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்களும், மீனவா்களும் வலியுறுத்துகின்றனா்.