முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 121 காவலா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் 121 காவலா்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. தீபக் சிவாச் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 31 ஜூலை, 2024 at 6:31 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் 121 காவலா்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. தீபக் சிவாச் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் மது விலக்கு அமல் பிரிவில் பணிபுரிந்த 56 காவலா்கள் தாலுகா காவல் நிலையங்களுக்கும், தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரிந்த 65 காவலா்கள் பணி மூப்பு அடிப்படையில் மது விலக்கு அமல் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். எஸ்.பி. தீபக் சிவாச் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments