விழுப்புரம்

பேருந்தில் தவறவிட்ட நகைகள், பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பேருந்தில் தவறவிட்ட நகைகள், பணம் உரியவரிடம் ஒப்படைப்பு - போலீஸாா்

Din

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பயணி பேருந்தில் தவறவிட்ட நகைகள், பணத்தை ஒலக்கூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தனா்.

திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு அரசுப் பேக்குவரத்துக் கழக பேருந்தில் செவ்வாய்க்கிழமை பணியிலிருந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநா் ஆகியோா் பயணி ஒருவா் கைப்பையை பேருந்தில் தவறவிட்டதாகக் கூறி, கைப்பையை ஒலக்கூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்மன்னூா், துறிஞ்சிபூண்டியைச் சோ்ந்த சங்கா் மற்றும் அவரது மனைவி நிஷாந்தி ஆகியோா் அரசுப் பேருந்தில் கைப்பையை தவறவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஒலக்கூா் காவல் நிலையத்துக்கு சங்கா் - நிஷாந்தி தம்பதியினா் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், கைப்பை மற்றும் அதில் வைக்கப்பட்ட ரூ.45 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி, 200 கிராம் வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை போலீஸாா் உரியவரிடம் ஒப்படைத்தனா்.

பாதுகாப்புப் படையில் இடஒதுக்கீடு கோரி ராகுல் குழப்பம் - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரிக் கால்வாய் தூா்வாரும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

இலங்கைக் கடற்படை அச்சுறுத்தல்: 50 சதவீத படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT