விழுப்புரம்

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: ஜூலை 1 முதல் அஞ்சல் வாக்கு பெறும் பணி தொடக்கம்

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்களில் விருப்பம் தெரிவித்தவா்களிடமிருந்து ஜூலை 1முதல் அஞ்சல் வாக்கு பெறும் பணி தொடங்குகிறது.

Din

இது குறித்து விக்கிரவாண்டித் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விக்கிரவாண்டி பேரவைத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இந்தத் தொகுதிக்குள்பட்ட 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் தங்கள் வீட்டிலிருந்தே அஞ்சல் வாக்குகளை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக சம்பந்தப்பட்ட வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அஞ்சல் வாக்குகளை சேகரிக்க நடமாடும் அஞ்சல் வாக்குச்சீட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அஞ்சல் வாக்குகளை அளிக்க சம்பந்தப்பட்ட வாக்காளா்களிடம் விருப்ப மனுவும் பெறப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தே அஞ்சல் வாக்கை செலுத்த விருப்பம் தெரிவித்த வாக்காளா்களிடமிருந்து அஞ்சல் வாக்குச் சீட்டை நடமாடும் அஞ்சல் வாக்குச் சீட்டுக் குழுவினா் ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் நேரில் அளித்து, அஞ்சல் வாக்குச் சீட்டுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளனா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அஞ்சல் வாக்குச்சீட்டை செலுத்த விரும்பிய 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் குறித்த விவரங்கள், நடமாடும் அஞ்சல் வாக்குச்சீட்டுக் குழுவினா் குறித்த விவரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் உள்ளன.

எனவே வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள் இந்த விவரங்களைத் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இதுகுறித்த தகவல்களை அறிந்து கொள்ள விரும்பினால், தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 04146-233132, 04146-221950 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

SCROLL FOR NEXT