செங்குறிச்சி திரெளபதியம்மன் கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள செங்குறிச்சி கிராமத்தில், அருள்மிகு திரெளபதியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலின் தோ்த் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து 20-ஆம் தேதி மாலை பகாசுரனுக்கு அன்னமிடுதலும், 21-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், இரவு வீதியுலாவும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் இரவில் அம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திரெளபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ராணி அலங்காரம் செய்துகோயிலைச் சுற்றி வலம் வந்து திருத்தேரில் எழுந்தருளினாா். மேளதாளம் முழங்க ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். கோயில் வளாகத்தில் புறப்பட்ட தோ் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பின்னா் நிலையை அடைந்தது.
உளுந்தூா்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.