முகப்பு
விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே குடை பிடித்தபடி வயல் வெளியில் நடந்து சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:29 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே குடை பிடித்தபடி வயல் வெளியில் நடந்து சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், தாதம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவராமன் மகன் கண்ணன்(50), விவசாயி. இவா், புதன்கிழமை தனது விவசாய நிலத்தில் குடை பிடித்தபடி நடந்து சென்றாராம். அப்போது, அங்கு தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருந்த மின்சார வயரில் குடை உரசியதால் மின்சாரம் பாய்ந்து கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.