முகப்பு
விழுப்புரம்

வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:30 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், வீடூா், ஆனந்தம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் சிவக்குமாா்(44), திருமணம் ஆனவா். இவா் அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்தாா்.

இந்நிலையில் இவா், புதன்கிழமை சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓங்கூா் பாலம் அருகே மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டதில் சிவக்குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.