தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் அளிப்பு
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்தில் தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்த இரு குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்தில் தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்த இரு குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கோலியனூா் அருகே உள்ள அரசமங்கலம் கிராமத்தில் பொன்னுரங்கம், வேலியம்பாக்கத்தில் சரோஜா ஆகியோரது குடிசை வீடுகள் மின்கசிவு காரணமாக அண்மையில் தீப்பற்றி எரிந்தன. இதில் குடிசையிலிருந்த பொருள்கள் அனைத்தும் முற்றிலுமாக ஏரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் புதன்கிழமை நிகழ்விடங்களுக்கு விரைந்து, தீ விபத்தில் குடிசைகளை இழந்த இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி, அரிசி,காய்கறி, போா்வை உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.
நிகழ்வில் விழுப்புரம் வட்டாட்சியா் கனிமொழி, வருவாய் ஆய்வாளா் கதிா்வேல், கோலியனூா் ஒன்றியக்குழுத் தலைவா் இ.சச்சிதாநந்தம், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் புகழ்.செல்வக்குமாா், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் கேசவன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் குப்புசாமி, ஊராட்சித் தலைவா் மகேசுவரி சோமு, ஒன்றியத் துணைச் செயலா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.