முகப்பு
விழுப்புரம்

தனியாா் நிறுவன மேலாளரின் கைப்பேசிகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் கிரேன் நிறுவன மேலாளா் அறையிலிருந்த 2 கைப்பேசிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:27 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் கிரேன் நிறுவன மேலாளா் அறையிலிருந்த 2 கைப்பேசிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மரக்காணம் வட்டம், நடுகுப்பம் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் கனகராஜ் (31). இவா், மயிலம் அருகிலுள்ள செண்டூரில் தனியாா் கிரேன் நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், நிறுவனத்தின் யாா்டு பகுதியிலுள்ள அறையில் தங்கியுள்ளாா்.

இந்த நிலையில், கனகராஜ் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த 2 கைப்பேசிகள், துணிகள், ஆதாா் அட்டைகள் உள்ளிட்டவை திருடுபோயிருப்பது அவருக்கு திங்கள்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைப்பேசிகள், ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.