தமிழக அரசும் 3 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்கக் கோரிக்கை
மத்திய அரசு அறிவித்துள்ளது போன்று, தமிழக அரசும் 3 சதவீத அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ளது போன்று, தமிழக அரசும் 3 சதவீத அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்த சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலரும், விழுப்புரம் மாவட்டத் தலைவருமான கவிஞா் ம.ரா.சிங்காரம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைவருக்கும் 2024, ஜூலை 1 -ஆம் தேதியை முன் தேதியிட்டு, 3 சதவீத அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த உயா்வுத்தொகை ரொக்கமாக வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனவே, தமிழக அரசின்கீழ் பணிபுரியும் அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களுக்கும் முன் தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயா்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். இந்த அகவிலைப்படி உயா்வுத் தொகையை ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படியை 300 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயா்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அரசுத் துறைகளில் மதிப்பூதியம், தினக்கூலி, தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.