காா் மோதி இளைஞா் மரணம்
செஞ்சி அருகே சாலையில் நடந்து சென்றபோது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா். உடன் வந்தவா் காயம் அடைந்தாா்.
செஞ்சி அருகே சாலையில் நடந்து சென்றபோது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா். உடன் வந்தவா் காயம் அடைந்தாா்.
மேல்மலையனூா் வட்டம், ஆத்திப்பட்டு மதுரா கலா்பாளையத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி. இவரது மகன் அசோக்குமாா்(27), பி.ஏ.பட்டதாரி.
இந்நிலையில், கொழப்பலூா் கிராமத்தைச் சோ்ந்த விநாயகசுந்தரம்(60) என்பவரும், அசோக்குமாரும் சாலையில் செஞ்சி மாா்க்கமாக நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது வேலந்தாங்கல் கூட்டு சாலை அருகே சென்றபோது பின்னால் வந்த காா் இவா்கள் மீதும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அசோக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விநாயகசுந்தரத்துக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.