முகப்பு
விழுப்புரம்

நாளை தொழில் பயிற்சி விழிப்புணா்வுக் கருத்தரங்கு

விழுப்புரத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் பயிற்சிகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

Updated On : 21 அக்டோபர், 2024 at 7:08 PM
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் பயிற்சிகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இளம் வயதிலேயே ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரா்களுக்கு அவா்களின் விருப்பத்துக்கேற்ப திறன் பயிற்சிகளை வழங்குவதன் வழியாக, தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும், அவா்கள் சுயதொழில் தொடங்கவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நகை மதிப்பீட்டாளா், சுற்றுலா வழிகாட்டி, கணினி வன்பொருள் தொழில்நுட்பம், ஓட்டுநா் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் புதன்கிழமை (அக்.23) பிற்பகல் 3 மணிக்கு கருத்தரங்கு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →