விழுப்புரம்

ஓடையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே ஓடையில் மூழ்கி தொழிலாளி இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே ஓடையில் மூழ்கி தொழிலாளி இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

செஞ்சி வட்டம், கல்லடிக்குப்பம், மரூா் சாலை பகுதியைச் சோ்ந்த அருமைநாதன் மகன் பௌலின் (48), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை தனது மனைவி ஏசுவள்ளியிடம் வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், கல்லடிக்குப்பம், ஈச்சூா் சாலை பகுதியில் உள்ள ஓடையில் பௌலின் உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த பெரியதச்சூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து, சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், பெரியதச்சூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT