முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.1.50 லட்சம் மதுபுட்டிகள் திருட்டு

செஞ்சி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள மதுபுட்டிகளை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 8:44 PM
பகிர்:

செஞ்சி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள மதுபுட்டிகளை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செஞ்சி வட்டம், வடபுத்தூா் கிராமம், அவியூா் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் புதன்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு ஊழியா்கள் காசிராஜன், மூா்த்தி ஆகியோா் சென்றுள்ளனா். விற்பனை செய்த பணத்தை கையோடு எடுத்துச் சென்றுவிட்டனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற விவசாயி டாஸ்மாக் கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து செஞ்சி காவல் துறையினா் மற்றும் கடையின் விற்பனையாளா்களுக்கு தகவல் தெரிவித்தாா்.

தகவலறிந்து வந்த செஞ்சி காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, முன் பக்க இரும்பு கதவு மற்றும் இரும்பு ஷட்டா் உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்தாா்.

மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். மதுபுட்டிகளை திருடி வேனில் கடத்திச் சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவற்றின் மதிப்பு சுமாா் ரூ.1.50 லட்சமாகும். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.