முகப்பு
விழுப்புரம்

தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்புகளை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 7:53 PM
செஞ்சி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்புகளை வழங்கிய செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்புகளை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினாா்.

செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதன் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் அண்ணாதுரை வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ பங்கேற்று தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, உறுப்பினா் ஜான்பாஷா, சங்கா், துப்புரவு ஆய்வாளா் பாா்கவி, இளநிலை அலுவலா் ஆனந்தராம் ஆகியோா் கலந்து கொண்டனா்.