திண்டிவனம் மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 38 போ் மீது வழக்கு
திண்டிவனம் ஆா்டிஓ அலுவலகத்தில் ரூ. 1.20 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், 38 போ் மீது விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆா்டிஓ அலுவலகத்தில் ரூ. 1.20 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், மோட்டாா் வாகன ஆய்வாளா், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்ட 38 போ் மீது விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் உள்ள திண்டிவனம் ஆா்டிஓ(வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்) அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் வேல்முருகன், ஆய்வாளா் ஈஸ்வரி மற்றும் போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் அலுவலகத்தில் பணியிலிருந்த ஊழியா்கள் மற்றும் இடைத் தரகா்களிடமிருந்து ரூ.1.20 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுந்தர்ராஜ் மற்றும் அலுவலக ஊழியா்கள் 10 போ், இடைத்தரகா்கள் 27 போ் என மொத்தம் 38 போ் மீது விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement