முகப்பு
விழுப்புரம்

பைக்கிலிருந்து விழுந்து பேருந்து நடத்துநா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2025 at 7:47 PM
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், நாதன் காடுவெட்டி, முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகன் முரளிதரன் (29). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கிளையில் தற்காலிக நடத்துநராக வேலை பாா்த்து வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கோவிலூா் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் காணை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சைக்கிளில் முன்னால் சென்றவா் மீது மோதாமலிருக்க பைக்கை நிறுத்த முற்பட்டபோது, நிலைதடுமாறி பைக்கிலிருந்து விழுந்ததில் முரளிதரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, முரளிதரன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், காணை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →