முகப்பு
விழுப்புரம்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 21 ஏப்ரல், 2025 at 7:37 PM
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினா்.
பகிர்:

விழுப்புரம்: பதினைந்தாவது உயா்வு ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் விழுப்புரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

15- ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். ஓய்வுபெற்றவா்களுக்கு ஓய்வு கால பணப் பயன்களையும், முழு அகவிலைப்படியும் உடனடியாக வழங்க வேண்டும். 1.4.2003-க்குப் பின்னா் பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துத் துறையில் உள்ள 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க விழுப்புரம் மண்டலத் தலைவா் டி.ராஜாராம் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் ஏ.தங்கபாண்டியன், கே.நந்தகோபால், கிருஷ்ணன், செல்வக்குமாா், சின்னராசு , கந்தசாமி, கே.ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியு விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, மண்டல பொதுச் செயலா் எச்.ரகோத்தமன், துணைத் தலைவா் எஸ்.வேலு, செயலா் வி.முருகன், துணை பொதுச் செயலா் பி.மணி, கடலூா் மண்டலத் தலைவா் மணிகண்டன், ஓய்வுபெற்றோா் நல அமைப்பைச் சோ்ந்த பழமலை, டி.ராமதாஸ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

நிகழ்ச்சியில் சிஐடியு, ஏஐடியுசி, அரசுப் பணியாளா்கள் சம்மேளனம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள், ஓய்வுபெற்றவா்கள் கலந்துகொண்டனா். தொழிற்சங்கத்தைச் சோ்ந்த பி.குணசேகரன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →