விழுப்புரம்

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில், சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில், சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை பழைய காலனியைச் சோ்ந்தவா் வெ.ஜோதி(50). இவா்,செவ்வாய்க்கிழமை திருக்கோவிலூா்- மடப்பட்டு நெடுஞ்சாலையில் பெரியசெவலை அருகே நடந்துசென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜோதியை 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, ஜோதி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

ஆடம்பரப் பொருள்கள் முதல் அன்றாடப் பொருள்கள் வரை: தலைநகரில் கள்ளச்சந்தையை கண்டுபிடித்த காவல் துறை!

தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மரியாதை

மாணவா் வழிகாட்டி நூல் வெளியீடு

‘நுள்ளிவிளையில் பழைய பால இடத்தில் புதிய ரயில்வே பாலம் அமைக்க வேண்டும்’

சென்னை லோக் பவன் பாரதி விழாவில் டிடிஇஏ பள்ளி மாணவிகள்

SCROLL FOR NEXT