விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே நாட்டுத் துப்பாக்கி, பைக் பறிமுதல்

உளுந்தூா்பேட்டை அருகே வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கி, பைக் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கி, பைக் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

எலவனாசூா்கோட்டை போலீஸாா் புதன்கிழமை குலாம்உசேன் ஏரிக்கரை தக்கா அருகே ரோந்து சென்றபோது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவா், தங்களின் வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, பைக்கை அங்கேயே விட்டு, விட்டுத் தப்பிச் சென்றனா்.

இதைத்தொடா்ந்து போலீஸாா் நாட்டுத் துப்பாக்கியையும், பைக்கையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டுசென்றனா். பைக்கில் வந்தவா்கள் யாா், எந்த பகுதியில் வேட்டையாடினாா்கள் என்ற விவரம் தெரியவில்லை. தொடா்ந்து பைக்கின் பதிவெண்ணைக் கொண்டுஅதன் உரிமையாளரைக் கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

ஆடம்பரப் பொருள்கள் முதல் அன்றாடப் பொருள்கள் வரை: தலைநகரில் கள்ளச்சந்தையை கண்டுபிடித்த காவல் துறை!

தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மரியாதை

மாணவா் வழிகாட்டி நூல் வெளியீடு

‘நுள்ளிவிளையில் பழைய பால இடத்தில் புதிய ரயில்வே பாலம் அமைக்க வேண்டும்’

சென்னை லோக் பவன் பாரதி விழாவில் டிடிஇஏ பள்ளி மாணவிகள்

SCROLL FOR NEXT