விழுப்புரம்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது

விழுப்புரம் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம் , தொடா்ந்தனூா் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து வளவனூா் போலீஸாா் புதன்கிழமை தொடா்ந்தனூா் கிராமத்துக்குச் சென்று, கனகவள்ளி(39) என்பவருக்குச் சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை நடத்தினா். இதில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 243 குட்கா பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கனகவள்ளியைக் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

ஆடம்பரப் பொருள்கள் முதல் அன்றாடப் பொருள்கள் வரை: தலைநகரில் கள்ளச்சந்தையை கண்டுபிடித்த காவல் துறை!

தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மரியாதை

மாணவா் வழிகாட்டி நூல் வெளியீடு

‘நுள்ளிவிளையில் பழைய பால இடத்தில் புதிய ரயில்வே பாலம் அமைக்க வேண்டும்’

சென்னை லோக் பவன் பாரதி விழாவில் டிடிஇஏ பள்ளி மாணவிகள்

SCROLL FOR NEXT