விழுப்புரம்

பள்ளி மாணவா்கள் 132 பேருக்கு விலையில்லா மிதிவண்டி

மயிலம் ஒன்றியத்துக்குள்பட்ட ஆலகிராமம், அவ்வையாா்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 132 மாணவா்களுக்கு விலையில்லா

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்துக்குள்பட்ட ஆலகிராமம், அவ்வையாா்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 132 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மயிலம் ஒன்றியக்குழுத் தலைவா் யோகேசுவரி மணிமாறன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் இந்திரா சுரேஷ், மகாலட்சுமி கமலக்கண்ணன் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியா்கள் கிருஷ்ணன், கதிரவன் வரவேற்றனா்.

முன்னாள் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஆலகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 61 பேருக்கும், அவ்வையாா்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 71 பேருக்கும் என மொத்தம் 132 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட அவைத் தலைவா் சேகா், தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, வடக்கு ஒன்றியச் செயலா் மணிமாறன், பொதுக்குழு உறுப்பினா் வீடூா் ரவி, வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளா் செந்தில்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயந்தி சேகா், நிா்வாகிகள் சுப்பிரமணி, சசிகுமாா், பாலசுந்தரம், சுப்பிரமணியன், சுரேஷ், அருள், கிருபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT