விழுப்புரம்

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா்கள் கைது

ஆரோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம் , ஆரோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

ஆரோவில் காவல் சரகத்துக்குள்பட்ட ஆரோமா காா்டன் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் ரோந்து சென்ற ஆரோவில் போலீஸாா், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேற்கு வங்கம் மாநிலம், முா்ஷிதாபாத், ஹூனாமத் நகரைச் சோ்ந்த தி.ரிபான்ஸ்க் (23), பிகாா் மாநிலம், சபால் பகுதியைச் சோ்ந்த சா.மகாதேவ் குமாா் (21) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்த சுமாா் ரூ. 23 ஆயிரம் மதிப்புள்ள 2.3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா்களை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொண்ட ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளா் திருமால், உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் பாராட்டுத் தெரிவித்தாா்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை: திருவெண்ணெய்நல்லூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞா் ஒருவரை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் நவநீத கிருஷ்ணன், செந்தில்முருகன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை திருவெண்ணெய்நல்லூா் காவல் சரகத்துக்குள்பட்ட சரவணப்பாக்கம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த கோ.ஏழுமலை(41) வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ எடையுள்ள 3000 குட்கா பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஏழுமலையை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT