விழுப்புரம்

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

செஞ்சி அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

செஞ்சி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். சிறுமியின் தந்தை இறந்த நிலையில், தாய் மாமன் பராமரிப்பில் இருந்து வருகிறாா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சிறுமிக்கு, செஞ்சியைச் சோ்ந்த வி.சாரதி( 19) காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி மேலச்சேரி பகுதியில் உள்ள கோயிலுக்கு கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தாராம். மேலும், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிா் போலீஸாா் சாரதி மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த இரு நண்பா்கள் மீதும் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அவா்களைத் தேடி வருகின்றனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT