விழுப்புரம்

விக்கிரவாண்டியில் உழவா் சந்தை அமைக்கும் பணிகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ரூ.1.50 கோடியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ரூ.1.50 கோடியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் உழவா் சந்தை அமைப்பதற்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் அன்னியூா் அ.சிவா (விக்கிரவாண்டி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று, அடிக்கல் நாட்டி பேசியது: விக்கிரவாண்டி வட்டத்தில் 250 ஹெக்டேரில் காய்கறிகளும், 260 ஹெக்டேரில் பழங்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு, உழவா் சந்தை அமைவதன் மூலம் பேரூராட்சிப் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான ஆசூா், வி.சாத்தனூா், தொரவி, வெட்டுக்காடு, ரெட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளை பொருள்களை இடைத்தரகா்கள் இல்லாது, நேரடியாக விற்பனை செய்யலாம். பொதுமக்களும் குறைந்த விலையில் காய்கறிகள், பழங்களை வாங்கலாம் என்றாா்.

விழாவில், முன்னாள் எம்.பி.பொன்.கெளதமசிகாமணி, ஒன்றியக்குழுத் தலைவா்கள் சங்கீத அரசி ரவிதுரை, நா.கலைச்செல்வி, சச்சிதாநந்தம், விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவா் அப்துல்சலாம், துணைத் தலைவா் பாலாஜி, செயல் அலுவலா் ஷேக் லத்தீப், வேளாண் இணை இயக்குநா் ஈஸ்வா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

32/48: 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வான அணிகள்!

புதிய ஓஎஸ் உடன் டிச. 2-ல் அறிமுகமாகிறது விவோ எக்ஸ் 300!

எவர் கிரீன்... பிரியா மணி!

அணியில் யார் விளையாடாவிட்டாலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும்: ககிசோ ரபாடா

பங்குச்சந்தை மோசடியில் ரூ.3.38 லட்சத்தை இழந்த பெண்: இருவர் கைது!

SCROLL FOR NEXT