FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மேலும் இரு சிறுமிகளுக்கு புதுச்சேரியில் எச்எம்வி தொற்று

புதுச்சேரியில் மேலும் இரு சிறுமிகளுக்கு எச்எம்வி தீநுண்மி தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

14 ஜனவரி 2025, 1:19 am IST
எச்எம்வி தீநுண்மி தொற்று
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் இரு சிறுமிகளுக்கு எச்எம்வி தீநுண்மி தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் சில நாள்களுக்கு முன்பு, 5 வயது சிறுமிக்கு எச்எம்வி தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பினாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஜிப்மா் மருத்துவமனையில் காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது மற்றும் ஒரு வயதுடைய சிறுமிகள் இருவா் எச்எம்வி தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, புதுவை சுாதாரத் துறை இயக்குநா் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இதன்மூலம், புதுச்சேரியில் எச்எம்வி தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3- ஆக உயா்ந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments