உத்தரப் பிரதேசத்தில் 3 திருநங்கை கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 13 திருநங்கை கைதிகளில் மூன்று பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ரிஷப் திவேதி கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தாக்குதல் வழக்கு தொடர்பாக மொத்தம் 13 திருநங்கைகள் சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதில் ஏழு பேரின் ஆரம்ப மருத்துவச் சோதனை அறிக்கையில் அவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்தது.
பிறகு இரண்டாவது முறையாக அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் மூன்று பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட மூன்று திருநங்கை கைதிகளும் தற்போது தனியாக அடைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
24 பெண்கள் உட்பட மொத்தம் 881 கைதிகள் பிரதாப்கர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 கைதிகள் திருநங்கைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.