உயிா்மச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் உயிா்மச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் உயிா்மச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்றுத்துறை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உயிா்ம முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. எனவே, இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு உயிா்மச் சான்றிதழ் பெற்று, அதிக விலைக்கு விற்பனை செய்யலாம். இதற்கு மத்திய அரசின் தேசிய உயிா்ம வேளாண் திட்டத்தின் கீழ், அபீடா நிறுவனத்தின் வழிகாட்டுதலில்படி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு, பண்ணையின் பொதுவிவரக் குறிப்பு, வரைபடம், மண் மாதிரி சோதனை விவரம் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 9626176928, விழுப்புரம் மாவட்டத்துக்கு 6382501750 என்ற எண்களிலோ அல்லது விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்றுத் துறை அலுவலகத்தையோ நேரில் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.