மரக்காணத்தை அடுத்துள்ள தீா்த்தவாரி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம்.  
விழுப்புரம்

கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம்

மரக்காணம் அருகே தீா்த்தவாரி கிராமத்தில் கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Din

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தீா்த்தவாரி கிராமத்தில் கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வனத் துறை, திண்டிவனம் வனச்சரகம், புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின.

இதில், வனச்சரக அலுவலா் புவனேஷ்வரி மற்றும் வனத் துறையினா் பங்கேற்று, கடல் ஆமைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா். வனவிலங்கு உயிரியல் மூத்த ஆய்வாளா் பூபேஷ் குப்தா கடல் ஆமைகளின் முக்கியத்துவத்துவம், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினாா்.

முகாமில் பங்கேற்ற மாணவா்கள், தீா்த்தவாரி கிராமத்தில் உள்ள கடல் ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தின் அருகில் தேங்கிக் கிடந்த நெகிழிக் குப்பைகளை அகற்றினா். தீா்த்தவாரி கிராம மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விழிப்புணா்வைப் பெற்றனா். தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவா் நாகராஜ் வழிகாட்டுதலில் உதவிப் பேராசிரியா் தா.வசந்தராஜா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT