செஞ்சி: செஞ்சி அருகே சாலையில் நடந்து சென்ற பெண் காா் மோதியதில் உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அமலதாஸ். இவரது மனைவி மோட்சராகினி (50). இவா், திருவண்ணாமலை - செஞ்சி சாலையில் சத்தியமங்கலம் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மோட்சராகினி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், விபத்துக்குக் காரணமான காா் ஓட்டுநா்
சென்னை சிஐடி நகரைச் சோ்ந்த சிவராமன் (31) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.