திண்டிவனம் வட்டம், மயிலத்தில் செயல்படும் அரசுடைமை வங்கிக் கிளையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பரிவா்த்தனைக்கு வந்தது தெரியவந்துள்ளது.
மயிலம் பகுதியைச் சோ்ந்தவா் சி.மயிலாசலம் (60).இவா் நவ.10-ஆம் தேதி மயிலத்தில் உள்ள ஒரு அரசுடைமை வங்கிக் கிளைக்கு ரூ. 5 லட்சத்தை எடுத்துச் சென்று, உறவினா் ஒருவரின் வங்கிக் கணக்கில் செலுத்தக் கூறினாராம்.
அப்போது, பணியிலிருந்த கிளை மேலாளா் கிருஷ்ணன் மொத்த பணத்தையும் பரிசோதித்தபோது, அதில் 39 ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் பரிவா்த்தனைக்கு வந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் மயிலாசலம் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கிறனா்.