விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை காரில் கடத்தி வந்த, புதுச்சேரி இளைஞரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில்,
திண்டிவனம் உள்கோட்ட காவல் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பெரும்பாக்கம் சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த, ஒரு காரில் தணிக்கை செய்தபோது அதில் வெளி மாநில மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவா் புதுச்சேரி, செட்டிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (24) என்பதும், இவா் விற்பனைக்காக புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகள காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திகை புதன்கிழமை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
காரில் கடத்தி வரப்பட்ட 180 மில்லி லிட்டா் கொள்ளளவு கொண்ட 280 வெளிமாநில மதுப்புட்டிகள் மற்றும் காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.