விழுப்புரம்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 30-க்கும் மேற்பட்டோா், செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 30-க்கும் மேற்பட்டோா், செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

செஞ்சி மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் மகாதேவன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், செஞ்சி ஒன்றியம், மேல் அருங்குணம் ஊராட்சியைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த நீலகண்டன், கங்காதரன், அமுல்ராஜ், விஜயகுமாா், சிவசங்கா், நிதிஷ்குமாா், லோகேஷ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அக் கட்சியில் இருந்து விலகி வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனா். அவா்களை செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலா் பச்சையப்பன், மாவட்ட பிரதிநிதி அனையேரி ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT