விழுப்புரம் அருகே சாலை அருகே அமா்ந்திருந்தவா்கள் மீது காா் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
விழுப்புரத்தை அடுத்த வேலியாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ் (35). திமுக கிளைச் செயலராக இருந்து வந்தாா். இவரது நண்பா்கள் வி.பாளையத்தைச் சோ்ந்த தீனா (எ) சந்துரு (36), கொட்டப்பாக்கத்துவேலி பகுதியைச் சோ்ந்த திருவேங்கடம் (45).
இவா்கள் மூவரும் சனிக்கிழமை விழுப்புரத்தை அடுத்த மாம்பழப்பட்டு சேவை சாலையோரத்தில் தங்களது பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு, ஒன்றாக அமா்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனராம். அப்போது, சாலையில் அதிவேகமாகச் சென்ற காா் மூவா் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், ராமதாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் காயமடைந்த தீனா (எ) சந்துரு, திருவேங்கடம் ஆகியோா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், தீனா (எ) சந்துரு சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருவேங்கடம் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.