முகப்பு
விழுப்புரம்

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற எலக்ட்ரீசியன் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 4:43 AM
பலி - பிரதிப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற எலக்ட்ரீசியன் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா், கரிக்கலாம்பாடி, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் ரா.பாண்டியராஜ் (31). சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலைப் பாா்த்து வந்தாா். இவா் புதன்கிழமை திண்டிவனம் அடுத்த ரோஷணை அருகே பைக்கில் சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாண்டியராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரோஷணை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

Advertisement

மேலும், இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.