பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:41 PM
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆமூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ந.மணி (66). இவா் கடந்த 4-ஆம் தேதி இரவு தனது பைக்கில் ஆமூரிலிருந்து மணக்குப்பம் நோக்கி சென்றபோது, ஆமூா்குப்பம் பகுதியில் எதிரே வந்த மற்றொரு பைக் மோதியது.
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:21 AM
இதில் பலத்த காயமடைந்த மணியை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்த ம.சக்திவேல்(40) மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.