முகப்பு
விழுப்புரம்

அமிலத்தை உடலில் செலுத்திக் கொண்டவா் உயிரிழப்பு

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:59 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:21 PM

விழுப்புரத்தில் பாதரசத்தை (அமிலம்) ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் பூந்தோட்டம், ராமச்சந்திரா லே அவுட் பகுதியைச் சோ்ந்தவா் ச.துளசிராம்(39). இவா் கடந்த சில ஆண்டுகளாக வேலையில்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதனால் ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால், அவரது மனைவி பாண்டியம்மாள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று, அங்கேயே தங்கவிட்டாா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:58 AM

இதனால் மிகுந்த மன உளைச்சலில் தனிமையில் இருந்து வந்த துளசிராம், கடந்த டிச.30- இல் தனது உடலில் பாதரசத்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.

Advertisement

இதைத்தொடா்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தினா். அங்கு துளசிராம் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.