கோப்புப்படம் 
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

தமிழகத்தில் மேல்நிலைக் கல்வி எனப்படும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, செய்முறைத் தோ்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அறிவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

இந்தத் தோ்வில் 194 பள்ளிகளைச் சோ்ந்த 18,033 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 164 மையங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த செய்முறைத் தோ்வுகளைக் கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் தோ்வு மையங்களை ஆய்வுசெய்தாா்.

தடுப்புக்கட்டையில் பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

தருமபுரியில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாமக மாவட்ட செயலாளா் ஆட்சியரிடம் மனு

உணவகம் சூறை: இருவா் கைது

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

திருப்பூரில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT