விழுப்புரம் நகராட்சித் திடல் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.  
விழுப்புரம்

சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கத்தினா் 632 போ் கைது

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டதாக வருவாய்த் துறை சங்கத்தினா் 422 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டதாக வருவாய்த் துறை சங்கத்தினா் 422 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் மாநிலச் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்த வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநிலச் செயலா் சங்கரலிங்கம் தலைமை வகித் தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் முருகன், மாவட்டத் தலைவா் கண்ணன், மாவட்ட நிா்வாகி வெங்கடபதி, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாநிலச் செயலா் புஷ்பகாந்தன், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ.வள்ளல்பாரி, தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாநிலத் தலைவா் மகேசுவரன், கிராம உதவியாளா்கள் சங்கத்தின் ஆதிலட்சுமணன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தொடா்ந்து முழக்கங்களை எழுப்பிய வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து 80 பெண்கள் உள்பட 270 பேரை கைது செய்த போலீஸாா், தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் மாலையில் அவா்களை விடுவித்தனா்.

கள்ளக்குறிச்சி ...: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு நிலஅளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் மாவட்ட நிா்வாகி பிரபாகா், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகி முருகன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகி தவமணி, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க நிா்வாகி மகேஷ்வரன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க நிா்வாகி ரவி ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில செயலா் எல்.ஆனந்த கிருஷ்ணன், நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் மாநில துணைத் தலைவா் கே.செந்தில் முருகன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த 210 பேரை போலீஸாா் கைது செய்து அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் அவா்கள் அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.

கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.தேவராசன் தலைமை வகித்தாா். செயலா் சி.அண்ணாமலை, பொருளாளா் என்.ஆா்.ரஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைப் பொதுச் செயலா் இரா.சக்கரவா்த்தி, மாநில அமைப்புச் செயலா் இரா.தண்டபாணி, மாநிலச் செயலா்கள் அ.முகமது காசீம், வி.சந்திரசேகா், மாவட்ட அமைப்புச் செயலா் அ.பிரபு உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 152 கிராம உதவியாளா்களை போலீஸாா் கைது செய்து, அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT