விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.  
விழுப்புரம்

விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 404 போ் கைது

உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தினா் 404 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தினா் 404 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். கடுமையான ஊனமுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும். படுக்கையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க மாவட்டச் செயலா் ஏ.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி.ஜெயக்குமாா் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில் மாவட்டப் பொருளாளா் எம்.யுகந்தி, துணைத் தலைவா்கள் பி.அய்யனாா், எம்.மும்மூா்த்தி, துணைச் செயலா்கள் பி.கெளரி, எஸ்.செல்வி, கோலியனூா் ஒன்றியத் தலைவா் இ.முருகன், பொருளாளா் ஏ.வேல்மணி, துணைத் தலைவா்கள் எஸ்.குறளரசன், எம்.புஷ்பா, துணைச் செயலா்கள் எஸ்.சின்னையன், கே.கெளரி, மாவட்டக் குழு உறுப்பினா் கே.மணிகண்டன் உள்ளிட்ட பலா் போராட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து சாலையில் அமா்ந்தும், படுத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 216 பெண்கள் உள்பட 404 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

SCROLL FOR NEXT